Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்

அட்மின் மீடியா
0

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் Office Assistant வேலைவாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்



விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள மூன்று (3) அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:-

Office Assistant 

கல்வி தகுதி:-

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.



வயது வரம்பு:-

01.07.2023 அன்று விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பத்தாண்டு வரை வயது வரம்புச் சலுகை பெறத் தகுதியுடையவராவர்கள் (தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016, பிரிவு 64-ல் குறிப்பிட்டுள்ளவாறு)

(ii)முன்னாள் இராணுவத்தினருக்கு (ஏனையோர்) :

அ) ஆதி., ஆதி(அ), ப.ப., மி.பி.வ., /சீ.ம., பி.வ.(இஅ) மற்றும் பி.வ(இ) தவிர ஏனைய வகுப்பினைச் சார்ந்தவர்களுக்கு 55 வயது வரை சலுகை வழங்கப்படும்.

ஆ) மேலே (அ) வில் கூறப்பட்ட எந்த வகையிலும் சேராத "ஏனையோர்" விண்ணப்பத்தாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 50 வயது ஆகும். (தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016, பிரிவு 63 மற்றும் அரசாணை (நிலை) எண்.91, மனிதவள மேலாண்மை (எஸ்) துறை, நாள் 13.09.2021-இல் குறிப்பிட்டுள்ளவாறு)

இ) ஏற்கனவே ஏதேனும் ஒருபிரிவு/ பணி / பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் இராணுவ விண்ணப்பதாரர், முன்னாள் இராணுவத்தினர் என்ற சலுகையை மீண்டும் பெற முடியாது (தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016, பிரிவு 3(j)--ல் குறிப்பிட்டுள்ளவாறு)

மாத சம்பளம்:-

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சான்று நகல்களிலும் சுய சான்றொப்பமிடப்பட்டு இணைத்து அனுப்பப்பட வேண்டும். 

எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்படக்கூடாது. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 11.10.2023 முதல் 31.10.2023 பிற்பகல் 05.45 மணிக்குள் "ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், இராஜபாளையம்” என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

காலதாமதமாக வரப்பெற்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியற்ற (கல்வி, வயது, இனசுழற்சி) விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும். 

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் அனுப்பப்பட வேண்டும். 

மேலும், ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும், அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும். 

நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

31.10.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/10/2023100682.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback