Breaking News

அக்னியை 7 முறை சுற்றாமல் நடக்கும் திருமணம் செல்லாது அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

அக்னியை 7 முறை சுற்றாமல் நடக்கும் திருமணம் செல்லாது அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முழு விவரம்


தன்னை பிரிந்து சென்ற மனைவி முறையாக விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் செய்ததாகக் கணவன் தாக்கல் செய்த வழக்கில், இந்து திருமணம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம், திருமணத்தின்போது மணமக்கள் அக்னியை ஏழு முறை சுற்றிவராவிட்டால் திருமணம் செல்லாது எனக் கூறிyஉள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரைச் சேர்ந்தவர் சத்யம் சிங் இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஸ்மிருதி சிங் என்பவரை திருமணம் செய்துள்ளார்

திருமணத்திற்க்கு பிறகு இவருக்கும்மிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து ஸ்மிருதி சிங் கணவரிடமிருந்து பிரிந்து தனது தாய் வீட்டிற்க்கு சென்று விட்டார். மேலும் தன்னுடைய கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

இதில், குற்றம்சாட்டபட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

மேலும் ஸ்மிருதி சிங் ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அதில் ஸ்மிருதி சிங் மறுமணம் செய்துகொள்ளும் வரை அவருக்கு மாதம் ரூ.4,000 அளிக்குமாறு 2021-ம் ஆண்டு ஜனவரி 11-ல் கணவருக்கு உத்தரவிட்டது. 

அதையடுத்து, சத்யம் சிங் தன்னுடைய மனைவிக்கு எதிராக ஸ்மிருதி சிங் இரண்டாம் திருமணம் செய்ததால் தான் ஜீவனாம்சம் தரவேண்டாம் என மனுதாக்கல் செய்தால் இந்த விவகாரத்தில், மிர்சாபூர் மாஜிஸ்திரேட் 2022-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதியன்று ஸ்மிருதி சிங்குக்கு சம்மன் அனுப்பினார். 

அதையடுத்து ஸ்மிருதி சிங், சம்மன் உத்தரவு மற்றும் கணவரின் குற்றச்சாட்டு இரண்டையும் எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், ஸ்மிருதி சிங் தாக்கல் செய்த மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இந்த மனுவானது, நீதிபதி சஞ்சய் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி 

உங்கள் மனைவி இரண்டாவது திருமணம் செய்ததாக கூறியிருக்கிறீர்கள். ஆனால், அந்த திருமணத்தில் சப்தபடி சடங்கு (அக்னியை 7 முறை சுற்றுதல்) நடைபெற்றதா இல்லையா என்று நீங்கள் கூறவில்லை. அந்த சடங்கு நடைபெற்றதற்கான ஆதாரங்களையும் நீங்கள் சமர்ப்பிக்கவில்லை. இந்து திருமணச் சட்டப்படி, சப்தபடி சடங்கு நடைபெறாமல் நடக்கும் திருமணங்கள் செல்லாது. 

இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 7 படி இந்து திருமணத்தை இரு தரப்பினரின் வழக்கமான சடங்குகளுக்கு ஏற்ப நடத்தலாம் என்று வழங்குகிறது. இரண்டாவதாக, இதுபோன்ற சடங்குகள் மற்றும் சடங்குகளில் 'சப்தபதி' (மணமகனும், மணமகளும் இணைந்து புனித நெருப்பைச் சுற்றி ஏழு அடி எடுத்து வைப்பது) அடங்கும், இது ஏழாவது படி எடுக்கும்போது திருமணத்தை முழுமையாக்குகிறது 

முறையான சடங்குகள் பின்பற்றப்பட்டு இந்து மத திருமணங்கள் செய்யவில்லை என்றால் அந்த திருமணங்கள் செல்லாது. தாலி கட்டிய உடன் அக்னியை ஏழு முறை வலம் வந்தால் மட்டுமே இந்து சமய திருமணங்கள் முழுமையடையும். 

எனவே இதற்கான ஆதாரத்தை நீங்கள் கொடுக்காததால் உங்கள் மனைவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. மேலும், அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback