Breaking News

6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது - ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது - ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவிப்பு



இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

கடந்த 10 நாட்களாக அண்ணா நகர் சரக இணை ஆணையர், போக்குவரத்து அதிகாரிகள் , தவறான வழிகாட்டுதலின்படி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறி சோதனை நடத்தி உள்ளனர்.

இதில் முறையாக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை சிறை பிடித்துள்ளனர்.சுமார் 120 பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போது, கடந்த 2022ஆம் ஆண்டு தான் போக்குவவரது துறை அமைச்சகம் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 

அதனை மீறாமல் நாங்கள் கட்டணம் வசூல் செய்து வருகிறோம்.ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மாலை 6 மணி முதல் பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறுகையில், நேற்று மாலை தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டாக கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் , விழா காலங்களில் அரசு பேருந்தை விட ஆம்னி பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட்டுள்ளது என்றும், சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளை அதிகாரிகள் விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் எனவும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்ப வசதியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது

தற்போது போராட்டம் அறிவித்துள்ள நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது

போக்குவரத்துத்துறை ஆணையர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என  தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது

ஆம்னி பேருந்துகள் இன்று மாலை முதல் இயங்காது என அறிவித்திருந்தநிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு 

பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை என  தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback