காசா மருத்துவமனை மீது பயங்கர குண்டுவீச்சு 500 பேர் உயிரிழப்பு முழு விவரம்
பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பெரும் கண்டனங்கள் உலகம் முழுவதும் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் மருத்துவமனை மீது ஏவுகணை வீசிவிட்டதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதேபோல் பாலஸ்தீனத்தின் ஏவுகணை தான் தவறுதலாக விழுந்திருக்கும் என்று இஸ்ரேலும் பரஸ்பரம் குற்றம்சாட்டி உள்ளது. இருவருமே மாறி மாறி குற்றம்சாட்டுவதால் யார் வீசியது என்பது தெரியவில்லை.
பொதுவாக என்ன தான் போர் என்றாலும் மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தப்படாது. இதன் காரணமாகவே அப்பாவி மக்கள் மருத்துவமனைகளில் தஞ்சம் புகுவார்கள். ஆனால், இஸ்ரேல் காசாவில் உள்ள இருந்த மருத்துவமனையில் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது
பாலஸ்தீன பகுதி மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் காயம் அடைந்தவர்கள் வசிக்கும் காசாவில் உள்ள மருத்துவமனை வளாகத்தின் மீது செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதலில் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ்க்கு இடையில் கடந்த அக்டோபர் 7 ம் தேதி போர் தொடங்கியது. சுமார் 11 நாட்களை கடந்தும் போர் தீவிரமாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் காசாவில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இதுகுறித்து ஹமாஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவமனை மீதான தாக்குதல் போர்குற்றம், இனப்படுகொலை, இனப்படுகொலையை சர்வதேச நாடுகள், அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே காஸா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து ட்விட்டரில் தனது கவலையை ஜோ பைடன் வெளிப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
காஸாவிலுள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பயங்கரமான உயிர்ச் சேதத்தால் நான் கோபமும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன். இந்தச் செய்தியைக் கேட்டவுடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரிடம் பேசினேன். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற அப்பாவிகளுக்கு அமெரிக்கா சார்பில் இரங்கல் தெரிவிக்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார். இதற்கிடையில் அமெரிக்க அதிபர் பைடன் இன்று இஸ்ரேல் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு கனடா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலுக்கு பாலத்தீன அதிபர் முகமது அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
காஸாவில் மருத்துவமனை தகர்ப்பு என்பது மன்னிக்க முடியாத ஒரு போர் குற்றமாகும் என ரஷ்யா தெரிவித்துள்ளது ஜநாவில் இஸ்ரேலுக்கு எதிராக ரஷ்யா நேற்று கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் தீர்மானம் தாக்கல் செய்துள்ளது ரஷ்யா
Tags: வெளிநாட்டு செய்திகள்
