அம்பத்தூர் அருகே காவலர்களை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் 33 பேர் கைது
அம்பத்தூர் அருகே காவலர்களை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் 33 பேர் கைது
அம்பத்தூர் அருகே மதுபோதையில் காவலர்களை தாக்கிய வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த 33 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
சென்னை ஆவடி அடுத்த அம்பத்தூர் அருகே பட்டறைவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றார்கள் தொழிற்சாலையில் ஆயுதபூஜை அன்று அங்கு பணியாற்றியவர்களில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ரோந்து காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, இரு தரப்பினையும் சமாதானம் செய்துள்ளனர்.அப்போது போதையில் இருந்த வட மாநிலத்தவர்கள் தாக்கியதில், இரு காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.தகவல் அறிந்து காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரையும் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
தொழிற்சாலையில் மோதலை விசாரிக்க சென்ற போலீசாரை தாக்கிய வடமாநில வாலிபர்கள்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பிஹாரைச் சேர்ந்த ராம்ஜித் ராஜ்பன்சி (46), பிலாஸ்தாஸ் (43), ராசுகான் குமார் (22), சுராஜ் குமார் (18), பிண்டி ராஜ்வான்சி (31) ஆகிய 5 பேரை காவல் துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக 28 வடமாநில தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளரகள்
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆவடி காவல் ஆணையர் சங்கர், கடந்த 23ஆம் தேதி இரவு ஓர் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து 33 பேரை கைது செய்துள்ளோம், பொது அமைதியை பங்கப்படுத்த கூடிய எந்த செயலானாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். இதுபோல் அசம்பாவிதம் இனி நடைபெறாமல் இருக்க நிறுவனங்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவே இரண்டு நாட்கள் கால தாமதம் ஆனது. தமிழகத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களை தொழிலாளர் நலத்துறைத்துறையினர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்” என்றார்.
Tags: தமிழக செய்திகள்
