Breaking News

அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அட்மின் மீடியா
0

தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்



17ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் சென்னை ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,ராணிப்பேட்டை , திருவள்ளூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, கடலூர் ,ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback