Breaking News

தஞ்சாவூர் மக்களே அக்.25-ம் தேதி உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழாவை முன்னிட்டு அக்.25-ம் தேதி உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தினார். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. 

இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு அக் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback