Breaking News

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ₹209 உயர்வு!

அட்மின் மீடியா
0

 வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ₹209 உயர்வு!


சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

அந்த வகையில் அதே போல கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.158 குறைக்கப்பட்டது. அதன் படி சென்னையில் 1695 ரூபாய்க்கு விற்பனையானது. 

இந்தநிலையில் தற்போது வணிக பயனபாட்டிற்கான சிலிண்டர் விலை அக்டோபர் 1ஆம் தேதி முதல் 203 ரூபாய் அதிகரித்து 1898 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback