178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசையில் இன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் முழு விவரம்
178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசையில் இன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் முழு விவரம்
178 வருஷத்திற்குப் பின் நடைபெறூம் நடப்பாண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று இரவு 8.34 மணி முதல் நள்ளிரவு 02.25 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்வதால் இந்தியாவில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது. இந்த சூரிய கிரகணத்தை நாசா நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த ஆண்டின் பெரிய சூரிய கிரகணம் இது என்பதால் இதனை வளைய கிரகணம் அல்லது நெருப்பு கிரகண வளையம் என வானியலாளர்கள் அழைக்கிறார்கள்.
178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில், அரிய கிரகணம் நிகழ்கின்றது
அமெரிக்காவின் தென் மேற்கு மற்றும் மேற்கு கடற்கரைபகுதிகளில் உள்ளவர்கள் இந்த அற்புத காட்சியை காண முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த கிரகணத்தை சாதாரண வெற்றுக்கண்ணால் பார்வையிடுவதும், சன்கிளாஸ்களைப் பயன்படுத்துவதும் ஆபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது, கதிர்வீச்சுத் தாக்கம் அதிகரித்திருப்பதனால் உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கிரகணத்தை பார்வையிடும் படி பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தை நாசா நேரடி ஒளிபரப்பு செய்வதால் உலகின் எந்த மூலையில் வசிப்பவர்களும் நாசா இணைய தளத்தில் காணலாம்
நாசாவின் அதிகாரப்பூர்வ லைவ் வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
