மீண்டும் 1,000 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் ரூ.2000 நோட்டுகளுக்கு பதிலாக ரூ.1000 மதிப்புள்ள நோட்டுகள் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. இதன் பின்னர், இந்த 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே 19 ஆம் தேதி அறிவித்தது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி 2000 நோட்டுகளுக்கு பதிலாக ரூ.1000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்யுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி தற்போதைக்கு 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக எந்தவித பரிசீலனையும் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
1000 ரூபாய் குறித்த கேள்விக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர், "இது ஊகமானது. அத்தகைய திட்டம் எதுவும் இல்லை," என்றார் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக ரூ.2,000 மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியது.
Tags: இந்திய செய்திகள்
