பேஸ்புக், இன்ஸ்டா டிவிட்டர் போல் இனி வாட்ஸப்பிலும் பாலோ செய்யலாம் எப்படி முழு விவரம் Whatsapp Channel
வாட்ஸ்அப் புதிய அப்டேட் சேனல்ஸ் என்ற புதிய அம்சம் அறிமுகம்! பேஸ்புக், இன்ஸ்டா டிவிட்டர் போல் இனி வாட்ஸப்பிலும் பாலோ செய்யலாம் முழு விவரம் Whatsapp Channel
வாட்ஸ்அப் செயலியில் 'சேனல்ஸ்' என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதன்மூலம் தனிநபர் அல்லது ஒரு நிறுவனத்தை பின்தொடர்ந்து அவர்கள் பகிரும் தகவல்கள், செய்திகளை தெரிந்துகொள்ளலாம்; இதில் அவர்களின் தொலைபேசி எண், புகைப்படம் உள்ளிட்ட சுயவிவரங்கள் எதுவும் பின்தொடர்பவர்களுக்கு காட்டாது
அதாவது பேஸ்புக், இன்ஸ்டா, டிவிட்டர் போல் இனி வாட்ஸப்பில் நாம் அவர்களை பாலே செய்யலாம்
தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தரப்பில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள இந்த புதிய வசதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சேனல் ஹிஸ்டரியை 30 நாட்கள் வரை சேமித்து வைத்துகொள்ளலாம்.
மேலும் அதில் சர்ச் ஆப்ஷனும் உள்ளது அதில் நாம் பின்தொடர வேண்டிய சேனல்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை பின் தொடரலாம், மேலும் இணைய முகவரிகள் மூலமாகவும் பயனர்கள் செய்திகளை அறியலாம்.
பாலோ செய்வது எப்படி
முதலில் ப்ளே ஸ்டோர் சென்று உங்கள் வாட்ஸப்பை அப்டேட் செய்யுங்கள்
அடுத்து உங்கள் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் பகுதியில் புதியதாக வந்துள்ள அப்டேட் என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்
அடுத்து அதில் சர்ச் செய்து உங்களுக்கு தேவையான பிடித்த சேனல்களை பாலோ செய்யுங்கள்
Tags: தொழில்நுட்பம்
