Breaking News

தமிழக முதல்வரின் Speaking4India பாட்காஸ்ட் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடா, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் கேட்கலாம் - லிங்க் இதோ

அட்மின் மீடியா
0

தமிழக முதல்வரின் Speaking4India பாட்காஸ்ட் வெளியானது - ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடா, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் கேட்கலாம் - லிங்க் இதோ

இந்தியாவின் குரல் 

இது மு.க.ஸ்டாலினின் குரல் மட்டுமல்ல 

இந்தியாவின் குரல்.

இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காப்பதற்கான குரல்.

கேட்கக் காத்திருங்கள்….


தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார் அதில்:-

ஆரம்பிக்கலாமா வணக்கம்… கடந்த சில மாதமாக உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவத்தில் பல விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். திமுக 75வது ஆண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி அண்ணா, கலைஞர் என்று இந்திய நிலப்பரப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களால் உருவாக்கப்பட்ட உடன் பிறப்புகள் நாங்கள். இப்பொழுது இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். 2024-ல் முடியப் போற பாஜக ஆட்சி இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்கிறது எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகின்ற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு ஆடியோ சீரீஸில் பேசப் போகிறேன். அதற்கு ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற தலைப்பு வச்சுக்கலாமா? தெற்கிலிருந்து வரும் இந்தக் குரலுக்காகக் காத்திருங்கள்’ என கூறி இருந்தார்

இந்நிலையில் இன்று முதல் ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற பாட்காஸ்ட் ஒளிபரப்பாகி உள்ளது, மேலும் மக்கள் இதனை 

தமிழ்

தெலுங்கு

மலையாளம்

கன்னடா

ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் கேட்கலாம் 

அதே போல முதல்வரின் பாட்காஸ்ட்களை https://www.speaking4india.com/என்ற இணையதளத்தில் கேட்கலாம்

https://www.youtube.com/@SpeakingforIndia/videos என்ற யூடியூப் you tube, லின்ங்கில்லும் கேட்கலாம்

ஸ்பாட்டிஃபை Spotify , மற்றும் அமேசான் மியூசிக் amazon music போன்ற டிஜிட்டல் தளங்களில் Speaking4India என்று சர்ச் செய்தி அனைவரும் கேட்கலாம். 

https://www.speaking4india.com/


தற்போது வெளியாகி இருக்கும் முதல் எபிசோட்டில் ஒன்றிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தியாவை யாராலும் காக்க முடியாது.குஜராத் மாடல் ஆட்சி தற்போது முடியப் போகிறது என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback