Breaking News

அமெரிக்க வெள்ளை மாளிகையில் வாசிக்கப்பட்ட ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம் என பரவும் வீடியோ உண்மை என்ன Rudram Stotram was recited at the White House

அட்மின் மீடியா
0

அமெரிக்க வெள்ளை மாளிகையில் வாசிக்கப்பட்ட ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம் என பரவும் வீடியோ உண்மை என்ன

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம் பாராயணம் செய்யப்பட்டது அமெரிக்கர்கள் இவ்வளவு சுத்தமாக உச்சரிக்க முடியும் என்று கற்பனை செய்து பார்க்க முடியாது ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம் ஜெஃப்ரி அர்ஹார்ட் அவர்களால் வெள்ளைமாளிகையில் வாசிக்கப்பட்டது. என ஓரு வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

ருத்ர மந்திரம் என்பது சிவனாகிய ருத்ரனை வணங்குகிறேன்" என்பது இதன் பொருள். சிவபெருமானின் அருளைப் பெற இந்த மந்திரம் சொல்லப்படுகிறது. இந்த மந்திரம் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்ற உதவுகிறது என்பது அவர்களின் நம்பிக்கை அப்படிபட்ட  ஸ்ரீ ருத்ரம் ஸ்தோத்திரம் வெள்ளை மாளிகையில் பாராயணம் செய்யப்பட்டது என பரவி வரும் வீடியோ உண்மையானதா என பார்ப்போம்

சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தியின் உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ அமெரிக்க வெள்ளை மாளிகையில் எடுக்கப்பட்டது இல்லை என்றும் 2018ம் ஆண்டு குரோஷியாவில் ஐரோப்பியர்களால் ஸ்ரீ ருத்ரம் சமகம் நிகழ்ச்சி என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=fNbGX7nM9Nc

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback