கொரோனா வைரஸை விட நிபா வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் மிக அதிகம் அதிர்ச்சி தகவல் nipah virus
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது இதன் காரணமாக கேரளாவில்
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இரண்டு பேர் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்கள், உடனடியாக அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிபா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணைக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு வருகிற 23ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை போல நிபா வைரஸும் காற்றில் பரவும் தன்மைக் கொண்டது. அதே போல, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. எனவே வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
நிபாவால் தாக்கப்பட்டோருக்கு சிகிச்சை
அளிக்கும் மருத்துவர்கள் கட்டாயம் கையுறையும், கவச உடையும் அணிந்திருக்க
வேண்டும். நிபா நோயாளிகளின் வியர்வை, ரத்தம், உமிழ் நீர் ஆகியவற்றை
தொடக்கூடாது" தனிமைப்படுத்துதல், பாதுகாப்பாக இருத்தலும் முக்கியமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிர படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் முழுமையான காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் ராஜீவ் பாஹல் கொரோனா வைரஸை விட நிபா வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் மிக அதிகம் என கூறியுள்ளார்.
கேரளாவில் நிபா வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸை விட நிபா வைரஸால் அதிகம் இறப்படுகள் ஏற்படும். கொரோனா வைரஸால் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரையில் தான் இறப்பு விகிதம் இருந்தது. ஆனால் நிபா வைரஸால் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இறப்பு ஏற்படலாம். இவ்வாறு கூறினார்.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
