Breaking News

ஆன்லைனில் பஸ் பாஸ் பெறும் வசதி அறிமுகம் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் bus pass apply online

அட்மின் மீடியா
0

ஆன்லைனில் பஸ் பாஸ் பெறும் வசதி அறிமுகம் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்

 


கட்டணமில்லா பேருந்து பயணசீட்டினை ஆன்லைன் மூலம் பெறும் வசதி அறிமுகம் ஆகி உள்ளது

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கட்டணமில்லா பேருந்து பயணசீட்டுகளை பயணிகள் பயன்படும் வகையில் வழங்கி வருகிறது.

அதன்படி தினசரி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர்களுக்கு இலவச பயணசீட்டு, அலுவலகம் செல்வோருக்கான கட்டண சலுகை அனுமதி சீட்டு, மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் பயணம் மேற்கொள்ள கட்டணமில்லா பயண அட்டைகள் மாதா மாதம் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த பயண அட்டைகளை ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்க மற்றும் புதிய பேருந்து பாஸ்களை பெற இனி இ-சேவை மையம் மூலம் கட்டணமில்லா சலுகை பயணசீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்

கட்டணமில்லா பயணசீட்டுகளை பெற விரும்பும் தகுதியுடையோர் அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது      https://www.tnesevai.tn.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

அதன் பின்பு ஒப்புதல் ஆனபின்பு உங்கள் கைபேசிக்கு மெசஜ் வந்த பின்னர் அட்டையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback