குவைத் செல்ல குடும்ப விசா ரெடி யாருக்கெல்லாம் தெரியுமா முழுவிவரம்
குவைத் செல்ல குடும்ப விசா ரெடி யாருக்கெல்லாம் தெரியுமா முழுவிவரம்
சுகாதார அமைச்சில் உள்ள வெளிநாட்டு மருத்துவ ஊழியர்களுக்கு சில நிபந்தனைகளின் கீழ் மனைவி மற்றும் குழந்தைகளுக்கான குடும்ப விசாவைப் பெற உள்துறை அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது என்று Al-Seyassah தினசரி தெரிவிக்கிறது.
குவைத் நாட்டில் வேலை செய்வோர் தங்கள் குடும்பத்தை அழைத்து செல்லும் வகையில் விசா நடைமுறை தளர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள செய்தியில் கொரோனா காலக்கட்டத்தில் குடும்ப விசாவிற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது குவைத்தில் பணி புரியும் சுகாதாரத்துறை ஊழியர்கள் தங்களின் மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்து வந்து உடன் தங்க வைத்து கொள்ளலாம் எனவும் இந்த குடும்ப விசா மூலம் ஆண்கள் 15 ஆண்டுகளும், பெண்கள் 18 ஆண்டுகளும் குவைத் நாட்டில் தங்கலாம். என்றும் இதற்காக Sahel App மூலம் சுகாதாரதுறை ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
குடும்ப விசா குறித்து சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளைத் தெளிவுபடுத்தும் வகையில், விசா வழங்குவது அல்லது அது மீண்டும் தொடங்கும் தேதி குறித்து உள்துறை அமைச்சகம் எந்த அறிவுறுத்தலையும் வெளியிடவில்லை
Tags: வெளிநாட்டு செய்திகள்
