மகளிர் உரிமைத் தொகையை பெற குடும்பத் தலைவிகளுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டு முழு விபரம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற குடும்பத் தலைவிகளுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டு! ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க திட்டம்! -
கலைஞர் மகளிர் உரி மைத்தொகையை பெற குடும்ப தலைவிகளுக் கென பிரத்யேசு ஏ.டி.எம் கார்டுகளைரேஷன் கடை கள் மூலம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் கடந்த சட்டப்பேரவை தேர்த லில் தி.மு.க. தேர்தல் அறிக் கையில் குடும்ப தலைவிக ளுக்கு உதவும் வகையில் மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறி வித்திருந்தது. அதன்படி, ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இத்திட்டம் தொடர்பாக அனைத்து தரப்பு மக்களின் எதிர் பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அந்தவகையில் கடந்தாண்டு நடந்த சட் டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது மக ளிர் உரிமைத் தொகை செப்.15ம் தேதி முதல் வழங்கப்படும் என. முதல் வர் மு.க.ஸ்டாலின் அறி வித்தார். இதற்காக நிதித் துறை தரப்பிலும், 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், தகுதி வாய்ந்த பெண்க ளுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக் கில் செலுத்துவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.
அதனடிப்படையில், பல்வேறு வழி காட்டு நெறிமுறைகள் வகுக்கப் பட்டு ரேஷன் கடை ஊழி யர்கள் மூலமாக விண் ணப்பங்கள் கொடுக்க ப்பட்டன. மேலும், இதற் கான விண்ணப்பங்களை முறையாக பதிவு செய்யும் முகாம்களும் நடத்தப்பட் டன. இதில் ஒட்டுமொத்த மாக தமிழகம் முழுவதும் 1.63 கோடி குடும்ப தலை விகள் விண்ணப்பித்திருந் தனர். அந்தவகையில் விண்ணப்பித்தவர் களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விண்ணப் ப தாரர்களை அடையா ளம் கண்டு தேர்வு செய் துள்ளனர். இந்த உரிமைத் தொகையை பெற வங்கி கணக்குகள் கட்டாய மாக் கப்பட்ட நிலையில், வங்கி கணக்கு இல்லாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் அவர்களின் கணக்குகளை தொடங்க வும் அறிவுறுத்தப்பட்டன.
இந்நிலையில், குடும்ப தலைவிகள் இந்த (ரூபே கார்டு) தயாராகி வருகிறது. இந்த கார்டு களை ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப தலைவிகள் பெற்று பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அதன்படி, இந்த திட் டத்தை அண்ணா பிறந்த நாளான வரும் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதல்வர் தொடங்கி வைத்த பின் னர், குடும்ப தலைவிசு ளின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்படும்.இதனையடுத்து, அடுத்த பட்ட ஏ.டி.எம். கார்டுகள் மூலம் அந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல, வி ண்ணப் பங்கள் நிராகரிக்கப் பட்ட குடும்ப தலைவிகள் அவர் களின் பகுதிகளில் உள்ள ஆர்.டி.ஓ.,விடம் சென்று முறையிட்டு நிவாரணத்தை தேடிக்கொள்ள வழிவகையும் செய்யப்பட் டுள்ளது.இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தலைமையில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்
