Breaking News

ஜெட் ஏர்வேஸ் நிறுவனரை அதிரடியாக கைது செய்த அமலாக்கத்துறை முழு விவரம்

அட்மின் மீடியா
0

வங்கிக் கடன் மோசடி வழக்கில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் 1992ல் துவக்கப்பட்டது இந்த தனியார் விமான 2017ல் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதையடுத்து 2019ல் விமான சேவை நிறுத்தப்பட்டது.

அதன்பின்பு ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த தொழிலதிபர் முராரி லால் ஜலான், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனைச் சேர்ந்த கால்ராக் கேபிடல் நிறுவனம் இணைந்து, 2021ல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கியது,இந்த ஆண்டு இறுதிக்குள் ஜெட் ஏர்வேஸ் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில். கடன் வாங்கி, 538 கோடி ரூபாயை திருப்பித் தராமல் மோசடி செய்ததாக, ஜெட் ஏர்வேஸ், அதன் நிறுவனரான நரேஷ் கோயல், அவருடைய மனைவி அனிதா, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது, கனரா வங்கி புகார் அளித்தது.

இந்த புகாரின் அடிப்படையில், அவருடைய அலுவலகம், வீடு உட்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக நரேஷ் கோயல் மும்பையில் உள்ள அமலாகக்த்துறை அலுவலகத்திற்கு நேற்று சென்றார். பல மணி நேர விசாரணைக்கு பிறகு நரேஷ் கோயலை அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தது.

நரேஷ் கோயலின் குடும்பத்தாருக்கான தனிப்பட்ட செலவுகள், வாகன செலவுகள் உள்ளிட்டவையும், நிறுவனத்தின் செலவாக கணக்கு காட்டியுள்ளனர். இதிலும் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளில் இருந்து கடனை வங்கி, அதை தனிப்பட்ட செலவுகள் மற்றும் முதலீடுகளுக்கு நரேஷ் கோயல் மடைமாற்றியுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback