தடை செய்யபட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை – ஐகோர்ட் கிளை திட்டவட்டம்
சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படும் விதமாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
வீட்டில் வைத்து வழிபட விநாயகர் சிலை
வாங்குவோரின் முழு விவரங்களை போலீஸ், மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவு
திருநெல்வேலியில் தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி கோரி ராஜஸ்தானை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில்
மனுதாரர் தயாரித்த சிலைகளை வீட்டில் வைத்து வழிபட அனுமதிக்கலாம்.
இருப்பினும், மனுதாரர் தயாரித்துள்ள விநாயகர் சிலைகளை வாங்குவோர், அதனை ஆற்றில் கரைக்க மாட்டோம் என உறுதிமொழி தர வேண்டும்
வீட்டில் வைத்து வழிபட விநாயகர் சிலை வாங்குபவர்களின் முழு விவரங்களையும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
