Breaking News

பரவும் தொற்று நோய் முகக்கவசம் அணிவது கட்டாயம் - தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்புளூயன்சா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.
 
 

இது தொடர்பாக அனைத்து மாவட்ட பொது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது

இன்ப்ளூயன்சா காய்ச்சலும் தற்போது பரவி வருகிறது. மருத்துவ துறையினர், சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். பருவ கால தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தை பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback