வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் கைது செய்த தேசிய புலனாய்வு முகமை
சென்னையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரை கைது செய்தது என்ஐஏ!
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
கைதான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபியிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற போது என்.ஐ.ஏ அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தமிழ்நாடு, கர்நாடகா என மாறி, மாறி தலைமறைவாக இருந்த ஐஎஸ் தலைவர் சையது நபில் நேபாளத்திற்கு தப்ப முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் பொருட்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
