சென்னையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து மீட்பு பணிகள் தீவிரம் முழு விவரம்
சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து விபத்துதீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது
சென்னையில் கனமழை பெய்து வருவதால் சைதாப்பேட்டையில் உள்ள சோன்ஸ் சாலையில் உள்ள ஓர் பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த விபத்தில் மழைக்கு ஒதுங்கியவர்கள், பெட்ரோல் போட வந்தவர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சரிந்து விழுந்த மேற்கூரைக்கு அடியில் சிக்கி இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
தகவல் அறிந்து தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மீட்புப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
சரிந்து விழுந்த மேற்கூரைக்கு அடியில் இருந்து 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில், பங்க் ஊழியர் கந்தசாமி (56) உயிரிழந்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்
