Breaking News

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை ,ரெய்டுக்கெல்லாம் பயம் இல்லை - ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டம்

அட்மின் மீடியா
0

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை ,ரெய்டு பூச்சாண்டிக்கெல்லாம் பயம் இல்லை - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டம்

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்தார்

அப்போது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கடந்த 18ஆம் தேதி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை, 

எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தற்போது வேறு எதுவும் கூற இயலாது. பாஜக - அதிமுக இடையே கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ரெய்டு பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள். நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில், அதிமுகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும். ஒருநாள் காத்திருந்தால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஊடகங்களில் அறிவிக்கிறேன். இவ்வாறு கூறினார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback