Breaking News

நிலவில் தாவி குதித்த விக்ரம் லேண்டர் வீடியோ வெளியிட்ட இஸ்ரோ

அட்மின் மீடியா
0

சந்திரயான்-3 திட்டத்தின் இலக்குகளையெல்லாம் விக்ரம் லேண்டர் விஞ்சியுள்ளது. அந்த லேண்டரை தாவிக் குதிக்கச் செய்யும் பரிசோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

கட்டளை கிடைத்ததும், அது என்ஜின்களை இயக்கி எதிர்பார்த்தபடியே 40 செ.மீ. உயரே எழுந்தது. பின்னர் சுமார் 30 முதல் 40 செ.மீ. தொலைவில் அது பாதுகாப்பாக தரையிறங்கியது.

 


நேற்று பிரக்யான் ரோவர், தனது பணிகளை நிறைவு செய்துவிட்டு அடுத்த 20 நாட்கள் ஓய்வுக்கு சென்றுவிட்டது என இஸ்ரோ அறிவித்தது 

நிலவில் மேற்கொண்ட ஆய்வின் தரவுகளை விக்ரம் லேண்டர் மூலமாக பூமிக்கு அனுப்பிவிட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது

செப்டம்பர் 22, ம் தேதி அன்று மீண்டும் நிலவில் பகல் பொழுது ஆரம்பிக்கிறது. அப்போது மறுபடியும் சூரிய உதயமானதும் ரோவரை திரும்ப இயக்க முடியலாம் எனவும் இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது

நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் ஆய்வை தொடங்கி உள்ள நிலையில் நிலவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை புகைப்படமாக , வீடியோவாக நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மக்களுக்கு ஷேர் செய்து வருகின்றார்கள்.

இந்நிலையில் இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில்:-

விக்ரம் லேண்டர், திட்டமிட்ட குறிக்கோளை தாண்டி சிறப்பாக செயல்படுகிறது. 

மேலும் ரோவர் ஒரு "ஹாப்" பரிசோதனையை வெற்றிகரமாக செய்தது என்றும்  ஹாப் பரிசோதனை என்பது கட்டுப்பாட்டு அறையில் இருந்து  அதன் இஞ்சின்கள் செயலாக்கப்பட்டு, நிலவின் தரைப்பரப்பிலிருந்து 40 சென்டி மீட்டர் உயரத்திற்கு வெற்றிகரமாக உயரே கிளம்பி, சுமார் 30-40 சென்டிமீட்டருக்கு அப்பால் பத்திரமாக தரையிறங்கியது என தெரிவித்துள்ளது

அதே சமயம் ரோவரில் Ramp, ChaSTE, ILSA ஆகியவை செயலாக்கப்பட்டு,உட்படுத்தப்பட்டது. இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது

இஸ்ரோ டிவிட்டரில்:-

Vikram Lander exceeded its mission objectives. It successfully underwent a hop experiment. 

On command, it fired the engines, elevated itself by about 40 cm as expected and landed safely at a distance of 30 – 40 cm away.  

Importance?: This 'kick-start' enthuses future sample return and human missions! 

All systems performed nominally and are healthy. Deployed Ramp, ChaSTE and ILSA were folded back and redeployed successfully after the experiment. 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/isro/status/1698570774385205621

தரையிறங்கிய ஒரே இடத்தில் மட்டுமின்றி, லேண்டரை நகர்த்தி வேறொரு இடத்திலும் ஆய்வு செய்ய முடியும் என்பதற்கான சாத்தியங்களை இஸ்ரோ செய்துள்ளது

செப்டம்பர் 22-ம் தேதி நிலவில் அந்த இடத்தில் சூரிய ஒளி வந்த பிறகு பிரக்யான் ரோவர் மீண்டும் இயங்குவதற்கு  வாய்ப்பு இருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback