Breaking News

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது சரியானதல்ல - முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும்

அதே சமயம் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானது அல்ல என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் முடித்து வைப்பு

சட்டவிரோத பண பரிவர்த்தையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்பு அவருக்கு அங்கு நடந்த பரிசோதனையில் இருதயத்தில் இரத்த அடைப்பு உள்ளது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டதுஅதன்பின்பு நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார்.

செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து அவரிடம் இருந்த இரு துறைகள் வெவ்வேறு அமைச்சர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டன. 

அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின் துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆய தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது 

மேலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையானது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றுவந்தது இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சென்னை உயர்நீதிமன்றம்

செந்தில் பாலாஜியை அமைச்சராவாக வைத்திருப்பது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல என துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது 

மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க வேண்டுமா என்பதை முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பதால் எந்த பலனும் இல்லை என செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்குகளை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback