Breaking News

மாணவர்களே ஹேப்பி நியூஸ் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கோடை வெயிலின் காரணமாக பள்ளிகள் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கிய நிலையில் தற்போது சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தமிழகத்தில் தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.



அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 27ம் தேதி தேர்வு முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 28 முதல் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி

1 ம் வகுப்பு முதல் 3ம் வகுப்புகள் வரை செப்.23  ம்தேதி முதல் அக்.2 ம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை 

4 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை செப்.28 ம்தேதி முதல்  அக்.2 தேதி வரை 5 நாட்கள் விடுமுறை

அக்.3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் 2 கட்டங்களாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக அக்டோபர் 6 ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் காலாண்டு விடுமுறை தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அ

அதன்படி, ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3 ஆம் தேதிக்கு பதிலாக 9 ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 3-ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback