Breaking News

நிலவில் ஆய்வை முடித்து விட்டு ஓய்வு எடுக்கும் பிரக்யான் ரோவர் இஸ்ரோ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பிரக்யான் ரோவர், தனது பணிகளை நிறைவு செய்துவிட்டு அடுத்த 20 நாட்கள் ஓய்வுக்கு சென்றுவிட்டது என இஸ்ரோ அறிவிப்பு

நிலவில் மேற்கொண்ட ஆய்வின் தரவுகளை விக்ரம் லேண்டர் மூலமாக பூமிக்கு அனுப்பிவிட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது

செப்டம்பர் 22, ம் தேதி அன்று மீண்டும் நிலவில் பகல் பொழுது ஆரம்பிக்கிறது. அப்போது மறுபடியும் சூரிய உதயமானதும் ரோவரை திரும்ப இயக்க முடியலாம் எனவும் இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது


நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் ஆய்வை தொடங்கி உள்ள நிலையில் நிலவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை புகைப்படமாக , வீடியோவாக நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மக்களுக்கு ஷேர் செய்து வருகின்றார்கள்

மேலும் இதுவரை பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் மற்றும் ஏபிஎக்ஸ்எஸ் கருவிகள் சரியாக செயல்படுகின்றன. அதேபோல் உந்துவிசை கலன் மற்றும் லேண்டரில் உள்ள அனைத்து கருவிகளும் சரியாக செயல்பட்டு வருகின்றன 

சந்திரயான்-3 பயணத்தில் பிரக்யான் ரோவர் திட்டமிட்ட பணிகளை முடித்துவிட்டது என்றும் இப்போது ரோவர் பாதுகாப்பாக  ஓய்வு நிலைக்குச் சென்றுவிட்டது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரக்யான் ரோவரின் APXS மற்றும் LIBS ஆய்வுக் கருவிகளும் அவற்றின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. இந்தக் கருவிகள் மூலம் பதிவு செய்யப்பட்ட தரவுகள் அனைத்தும் விக்ரம் லேண்டர் மூலமாக பூமிக்கு அனுப்பப்பட்டுவிட்டன என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

மறு பயன்பாட்டுக்காக பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ள இஸ்ரோ, செப்டம்பர் 22, 2023 அன்று மீண்டும் நிலவில் பகல் பொழுது ஆரம்பிக்கிறது. அப்போது மறுபடியும் சூரிய உதயமானதும் ரோவரை திரும்ப இயக்க முடியலாம் எனவும் இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சந்திரனின் ஒரு நாள் என்பது பூமியில் 28 நாட்களுக்குச் சமம். அதாவது அங்கு 14 நாட்களுக்குப் பகல் மற்றும் 14 நாட்களுக்கு இரவு நிலவும்.இதில் 14 நாட்களுக்கு பகல் நீடிக்கும் காலகட்டத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது. இந்த இரண்டு வார காலகட்டத்தில் இஸ்ரோவின் ஆய்வுகளை அது நிலவில் மேற்கொள்ளும்.

26 கிலோ எடை கொண்ட ரோவர் நிலவில் தரையிறங்கிய பின்பு தனது ஆய்வுகளை மேற்கொள்ளும். ரோவரில் இணைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சென்சார், ஆண்டனாக்கள் மூலம் தகவல்கள் பெறப்படும். 

ஒருவேளை சூரிய ஒளி படவில்லையென்றால் இந்தியாவின் நிரந்தர தூதராக ரோவர் நிலவில் இருக்கும் என்றும் இஸ்ரோ ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback