Breaking News

நிலவில் மீண்டும் உயிர்பெறும் பிரக்யான் ரோவர் விஞ்ஞானிகள் நம்பிக்கை முழு விபரம்

அட்மின் மீடியா
0
நிலவில் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விண்கலன்கள் விரைவில் விழித்தெழும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கான பணியில் இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்கலத்தை கடந்த ஜூலை, 14ம் தேதி இஸ்ரோ அனுப்பி வைத்தது.

பூமியிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. பூமியில் இருந்து 179 கிமீ தொலைவில் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. 

அதன்பின்பு இந்த விண்கலம் புவி வட்டப் பாதையில் இருந்து நிலவு வட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவை சுற்றி வந்தது.விண்கலத்துக்கும் நிலவுக்கும் இடையேயான சுற்றுப் பாதை தொலைவு படிப்படியாக குறைந்து வந்தது.இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள, 'புரபல்ஷன் மாட்யூல்' எனப்படும் உந்து கலத்தில் இருந்து, 'லேண்டர்' நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது

அதன்பின்பு விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கி பல தகவலை பூமிக்கு அனுப்பியது. 

ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்கள் ஆகும். நிலவில் சூரிய ஒளி கிடைக்கும் 14 நாட்களும் ஆய்வு மேற்கொண்டு தனது பணியை நிறைவு செய்தது.

14 பூமி நாட்கள் இயங்கும் வகையில் இந்த கலன்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நிலவில் ஓர் பகல்/இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம்.லேண்டரும், ரோவரும் மீண்டும் விழித்தெழுந்தால் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் தகவல்களை இஸ்ரோ சேகரிக்கும். 

ஸ்லீப் மோடுக்கு செல்வதற்கு முன்பு சுமார் 40 செ.மீ உயரத்துக்கு மேல் எழுப்பப்பட்டு, 30 முதல் 40 செ.மீ தொலைவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டு இடம் மாற்றப்பட்டது

மேலும் பிரக்யான் ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்லீப் மோடுக்கு செல்வதற்கு முன், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவில் சேகரித்த தகவல்கள் அனைத்தும் பூமிக்கு வந்து சேர்ந்து விட்டது.

தற்போது, நிலவில் ஸ்லீப் மோடில் இருக்கும் அந்த 14 நாட்கள் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை 22ம் தேதி மீண்டும் ஆய்வு மேற்கொள்ளும் என விஞ்ஞானிகள் நம்பிக்கையில் உள்ளார்கள்

நிலவில் பகல் தொடங்கிய பிறகு சூரிய சக்தி மூலம் லேண்டரும், ரோவரும் மின்சக்தியை உற்பத்தி செய்து மீண்டும் விழித்தெழ வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

சூரிய ஆற்றலை பெறும் அதனை செயல்பட வைக்கும் முயற்சியில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. நாளை (செப்டம்பர் 22-ஆம் தேதி) ரோவரும், லேண்டரும் மீண்டும் செயல்படும் என்று இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், நாளை மீண்டும் உயிர் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம், இல்லாமலும் போகலாம் என கூறப்படுகிறது. அப்படி அது சாத்தியமானால், அது இந்தியாவுக்கு சந்திரயான்-3யின் நிலவு பயணத்திற்கான கூடுதல் போனஸாக அமையும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback