Breaking News

அமெரிக்க அதிபர் பைடனை சந்திந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் வைரலாகும் புகைப்படம்

அட்மின் மீடியா
0
புதுதில்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டினையொட்டி மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் இன்று அளித்த விருந்தில், மாண்புமிகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டபோது, மாண்புமிகு அமெரிக்க நாட்டின் அதிபர் திரு.பைடன் அவர்களை சந்தித்து பேசினார்.

 


இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று துவக்க உரையாற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்படுவதாக ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார். 

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரானது. ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளித்தார். 

இதில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சந்தித்து பேசினார். இரவு விருந்தில் பங்கேற்ற போது அமெரிக்க அதிபரை சந்தித்து பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

இந்த சந்திப்பின் போது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback