இந்தியாவில் முதல்முறையாக ATM கார்டு இல்லாமல் யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி - முழு விவரம் வீடியோவில்
இந்தியாவில் முதல்முறையாக ATM கார்டு இல்லாமல் யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி - முழு விவரம் வீடியோவில்
மும்பையில் நடந்த குளோபல் ஃபின்டெக் விழாவில் காட்சிபடுத்தப்பட்ட UPI மூலம் பணம் எடுக்கும் பிரத்யேக ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் பணம் எடுப்பது என்பது பற்றிய காணொளி தற்போது வெளியாகி உள்ளது
டெபிட் கார்டு பயன்படுத்தாமல், UPI QR Code-ஐ ஸ்கேன் செய்து பணம் எடுக்கும் புதிய இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது ,இந்த தொழில்நுட்பம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை! கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது
தற்போது வெளியான வீடியோவில் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி கொண்ட UPI ATM மெஷினில் UPI Cardless Cash முறையைக் க்ளிக் செய்து தேவையான பணத்தை பதிவிட்டு அதன்பின், ATM மெஷின் ஸ்கிரீனில் தெரியும் QR யை போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற ஆப்பில் ஸ்கேன் செய்து ஓக்கே கொடுத்தால் ATM மெஷினிலிருந்து வெளிவரும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்
