கணக்கில் வந்த ரூ.9000 கோடி - வங்கி மீது சைபர் கிரைமில் புகார் அளித்த கார் ஓட்டுநர்
சென்னையில் கார் ஓட்டுநரின் வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ.9000 கோடி அடுத்து நடந்தது என்ன முழு விவரம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமார். இவர் சென்னையில் கார் ஓட்டி வருகிறார்.
கடந்த 9 ம் தேதி இவரது மொபைல் போனுக்கு வங்கிக்கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதாக மெசஜ் வந்துள்ளது மேலும் தனது வங்கிக் கணக்கில் வெறும் 15 ரூபாய் இருந்த நிலையில் யாரோ தன்னை ஏமாற்ற இதுபோல் மெசஜ் அனுப்பியுள்ளார்கள் என நினைத்து ராஜ்குமார் தனது வங்கிக்கணக்கில் இருந்து நண்பருக்கு 21,000 பணம் அனுப்பியுள்ளார்அதன்பின்பு தான் 9000 கோடி வந்தது உண்மை தான் மிகவும் சந்தோஷப்பட்டுள்ளார்
ய பிறகு தான் 9 ஆயிரம் கோடி ரூபாய் தன் வங்கிக்கணக்கிற்கு வந்தது உண்மை என்பதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அதன்பின்பு ராஜ்குமார் வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் செலுத்தப்பட்டதை அறிந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக அவரது வங்கிக்கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் வங்கி திரும்பி எடுத்துக்கொண்டது. வாடகை கார் ஓட்டுநர் வங்கிக்கணக்கில் திடீரென 9000 கோடி ரூபாய் டெபாசிட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனது வங்கி கணக்கில் 9000 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கார் ஓட்டுநர் ராஜ்குமார் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைமில் கார் ஓட்டுநர் ராஜ்குமார் புகார் அளித்துள்ளார்.
தனது வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட பணம் யாருடையது என்று விசாரணை நடத்துமாறு தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
