Breaking News

இன்று 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 


தமிழகத்தில் மேற்கு திசை மாறுபாட்டின் காரணமாக இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி கோவை, நீலகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. 

நாளை 22.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கன மழை காரணமாக வேலூரில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் உள்ள தொடக்க பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும்  6 முதல் 12ஆம் வகுப்பு பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback