ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.70 உயர்வு முழு விவரம் இதோ aavin ghee price
ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.70 உயர்வு முழு விவரம் இதோ
ஆவின் நெய் விலை லிட்டருக்கு 70 ரூபாயும், அரை லிட்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது
ஆவின் நிறுவனம் நெய் மற்றும் வெண்ணெயின் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, 15 மி.லி. பாக்கெட் நெய் ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு ரூபாய் உயர்த்தி ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
100 கிராம் நெய் விலை 75 ரூபாயிலிருந்து 85 ரூபாயாகவும்,
200 கிராம் நெய் விலை 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும்,
500 கிராம் நெய் விலை 315 ரூபாயிலிருந்து 365 ரூபாயாகவும்,
ஒரு கிலோ நெய் விலை 630 ரூபாயிலிருந்து 700 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வெண்ணெய் விலை அரை கிலோ 265 ரூபாயிலிருந்து ரூ.280 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
