வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 5 நாட்களுக்கு மழை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நிலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்நிலையில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுது ஆந்திர மற்றும் ஓடிஷா கரையை நோக்கி நகரும் என்று தெரிகிறது.
Tags: தமிழக செய்திகள்
