Breaking News

செப் 30 ம் தேதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம் மத்திய அரசு

அட்மின் மீடியா
0

சிறு சேமிப்பு திட்ட வாடிக்கையாளர்கள் வரும் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை சம்மந்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பித்து இணைக்க வேண்டும்.

ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால் சேமிப்பு கணக்குகள் முடக்கப்படும் மத்திய அரசு எச்சரிக்கை !

 

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி உட்பட சிறு சேமிப்புத் திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அவர்களது சேமிப்புக் கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கி சேமிப்பு கணக்குகளுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் அறிவித்த நிலையில், அதற்கு 6 மாதம் காலஅவகாசம் வழங்கி இருந்தது. அவகாசம் செப்டம்பர் 30-ம் தேதி முடிகிறது. எனவே தங்கள் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்படும் என தெரிகின்றது.
 
வங்கிக் கணக்குடன் ஆதாரை ஏன் இணைக்க வேண்டும்:-
 
நீங்கள் எளிதாக மற்றொரு வங்கிக் கணக்கைத் திறக்கலாம் மற்றும்  KYC நடைமுறையைத் தவிர்க்கலாம். 
 
உங்கள் வங்கிக் கணக்குடன் உங்கள் ஆதாரை இணைத்த பிறகு, LPG, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவற்றில் அரசாங்கம் வழங்கும் மானியங்களின் நேரடிக் கிரெடிட்டை நீங்கள் அனுபவிக்க முடியும். 
 
பல்வேறு அரசு நல நிதிகள், ஓய்வூதியங்கள், உதவித்தொகைகள் போன்றவற்றின் நேரடிக் கடன்களை செயல்படுத்துகிறது. 
 
ஆதார் எண் இணைப்பது எப்படி:-
 
உங்கள் வங்கியின் கிளைக்குச் சென்று நீங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கலாம்
 
வங்கிக்கு உங்கள் அசல் ஆதார் அட்டையை எடுத்துச் சென்று ஆதார் இணைக்கும் விண்ணப்பப் படிவத்தை பெற்று  உங்கள் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்

வங்கி அதிகாரிகள் விண்ணப்ப சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் வங்கிக் கணக்கு இணைக்கப்படும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback