Breaking News

அடுத்த 3 மணிநேரத்தில் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், தேனி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கோவை, நீலகிரி, திருப்பூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது.அதேபோல் பல்வேறு இடங்களில் மழையும் பெய்தது 

அதேபோல் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.09.2023 முதல் 29.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் அடுத்த 3 நேரத்திற்கு  தமிழகத்தின் மழை பெய்யவிருக்கும் 35 மாவட்டங்களில் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, தி.நகர், காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, நீலகிரி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய 35 மாவட்டங்களில் லேசான மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback