Breaking News

தமிழகத்தில் 28 ம் தேதி மிலாது நபி தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு milad un nabi 2023 tamilnadu

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் வரும் 28ம் தேதி பிறை தென்பட்டால் மிலாது நபி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்


தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரபியுல் அவ்வல் மாதத்துக்கான அமாவாசை காணப்பட்டுள்ளது.இன்ஷா அல்லாஹ், 1வது ரபியுல் அவ்வல் 1445 ஹிஜ்ரி 17-09-2023, ஞாயிறு முதல் ஆரம்பம்.மீலாதுன் நபி 28-09-2023 வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரபியுல் அவ்வல் மாதத்துக்கான அமாவாசை காணப்பட்டுள்ளது.

ரபிஉல் அவ்வல் மாத பிறை மேலப்பாளையம், திருநெல்வேலி மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் காணப்பட்டது, ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 17-09-2023 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மீலாதுன் நபி வியாழக்கிழமை 28-09-2023  அன்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback