செப் 28ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்க கூடாது என நடத்துனர்களுக்கு உத்தரவு
செப் 28ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்க கூடாது என நடத்துனர்களுக்கு உத்தரவு
செப்டம்பர் 28ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பயணிகளிடமிருந்து ₹2000 நோட்டுகளை பயணத் தொகையாக பெறக்கூடாது-அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை பொதுமக்களிடம் இருந்து 28- ஆம் தேதிக்கு பிறகு வாங்கக்கூடாது என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் கிளை மேலாளர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே செல்லும்ம் அதன்பின் செல்லாது என்று ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்தது. ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு கூடிய விரைவில் முடிவடைய உள்ளது இதனால் 28ஆம் தேதிக்கு பிறகு பொதுமக்கள் பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்