மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கிய வீடியோ
மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கிய வீடியோ
மஹாராஷ்டிர மாநில துணை முதல்வரும் நிதி அமைச்சருமான அஜித் பவார்(66) விமான விபத்தில் உயிரிழந்தார்
மஹாராஷ்டிரா பாராமதி பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததில் அஜித் பவார், அவரது பாதுகாவலர்கள் உள்ளிட்ட 5 பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர்
சரத் பவாரின் அரசியல் வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் தனித்து செயல்பட்டார் அஜித் பவார். 1991ல் 10வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு மாதங்களுக்குள் அந்த பதவியை ராஜினாமா செய்தார். 1991ல் இருந்து தொடர்ந்து 8 முறை பாரமதி சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.நிதி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளையும் கவனித்து வந்தவர் அஜித் பவார். மஹாராஷ்டிரா துணை முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர் அஜித் பவார்
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியை மம்தா பானர்ஜி வெளிப்படுத்தியுள்ளார். பாஜகவுடனான கூட்டணியிலிருந்து அஜித் பவார் வெளியேறத் திட்டமிட்டிருந்ததாக செய்திகள் வந்த நிலையில், அவரது மரணம் குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளார். அஜித் பவாரின் மரணத்தை உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் ஒரு அமைப்பு விசாரிக்கவேண்டுமென்று கோரியுள்ளார்...பெருந்தலைவர்களுக்கு விமானப் பயணங்கள் பாதுகாப்பற்றதாக இந்தியாவில் மாறியுள்ளன என்றும் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கிய வீடியோ
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/2016422382995702163
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ

