Breaking News

நாடு முழுவதும் 167 மருந்துகள் தரமற்றவை மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு 167 drug samples flagged as ‘not of standard quality’ in December 2025

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் 167 மருந்துகள் தரமற்றவை மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு




மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொரு மாதமும் மருந்துகளை ஆய்வுசெய்து அவற்றின் தரத்தை கணக்கிட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் [CDSCO] கடந்த டிசம்பர் மாதம் நடத்திய பரிசோதனையில் 167 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறிந்துள்ளது.

கடந்த டிசம்பரில் மத்திய மருந்து ஆய்வுக்கூடங்கள் 74 மருந்து மாதிரிகளை உரிய தரத்தில் இல்லை என்றும், மாநில மருந்து பரிசோதனை கூடங்கள் 93 மருந்து மாதிரிகளை உரிய தரத்தில் இல்லை என்றும் கண்டுபிடித்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.அந்த மருந்துகளின் பட்டியல் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த விவரங்களை அந்தத் தளத்தில் அறிந்துகொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback