முதல்முறையாக NDTVக்கு பேட்டி கொடுத்த தவெக தலைவர் விஜய்..! முழு விவரம்
முதல்முறையாக NDTVக்கு பேட்டி கொடுத்த தவெக தலைவர் விஜய்..!
சென்னையில் நடைபெற்ற NDTV தமிழ்நாடு சம்மிட் நிகழ்ச்சியின் போது, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யை NDTV தலைமை ஆசிரியர் ராகுல் கன்வால் தலைமையிலான குழு நேரில் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் உரையாடியுள்ளது.
அப்போது, தனது 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் சிக்கலில் இருப்பது குறித்துக் கேட்டபோது, அரசியல் வருகையால் படம் பாதிக்கப்படுவது குறித்துத் தயாரிப்பாளருக்காக வருத்தப்படுவதாகவும், ஆனால் இத்தகைய சவால்களை முன்பே எதிர்பார்த்து மனதளவில் தயாராக இருந்ததாகவும் விஜய் குறிப்பிட்டார். சினிமா கரியரைத் திட்டமிட்டே கைவிட்டுள்ளதாகவும், தற்போது தனது முழு கவனமும் மக்கள் பிரச்சினைகள் மீதே இருப்பதாகவும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.r
தனது அரசியல் முடிவு குறித்துப் பேசிய அவர், இது திடீரென எடுத்த முடிவல்ல என்றும், கொரோனா காலத்திற்குப் பிறகு இதைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்து முடிவெடுத்ததாகவும் கூறினார்.
தனது தந்தை அரசியல் பின்புலம் கொண்ட இயக்குநராக இருந்ததால், சிறுவயது முதலே அரசியலை அருகிலிருந்து கவனித்து வளர்ந்ததாகக் குறிப்பிட்ட விஜய், 33 ஆண்டுக்கால சினிமா வாழ்க்கையை விட்டு விலகுவது எளிதான முடிவல்ல என்றாலும், நீண்ட கால அரசியல் பயணத்திற்காகவே இந்த முடிவை மனப்பூர்வமாக எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
நான் கிங்மேக்கர் அல்ல, நான் போராடி வெற்றி பெறுவேன்" என்று விஜய் தெளிவாக கூறினார். "ஏன் நான் கிங்மேக்கர் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்ட அவர், தனது ரோல் மாடல்களாக எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை குறிப்பிட்டார். சினிமா துறையை திட்டமிட்டு கைவிட்டதாகவும், அது எளிதான முடிவு அல்ல என்றும் தெரிவித்தார்.
தேசிய ஊடகத்திற்குத் தான் அளித்த முதல் உரையாடலாக இதைக் கருதும் விஜய், இதை ஒரு 'Mock Interview' போலவே பார்ப்பதாகக் கூறினார். தான் போதுமான அளவு பேசுவதில்லை என்று எழுப்பப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தனது பொதுக்கூட்ட உரைகள் மூலம் எப்போதும் மக்களுடன் பேசிக்கொண்டுதான் இருப்பதாகவும், சரியான நேரத்தில் நிச்சயம் ஊடகங்களைச் சந்தித்துப் பேசுவேன் என்றும் அந்த உரையாடலில் தெளிவுபடுத்தினார்.
உங்கள் ஜன நாயகன் படம் சிக்கலில் உள்ளது. அரசியலில் நுழைந்தது உங்கள் சினிமா வாழ்க்கையை பாதித்ததா?
என் அரசியல் நுழைவால் #JanaNayagan គ្រល់ என் தயாரிப்பாளருக்காக வருத்தமாக இருக்கிறது. என் அரசியலால் படங்கள் பாதிக்கப்படலாம் என்று நான் முன்பே எதிர்பார்த்தேன். அதற்காக மனதளவில் நான் தயாராகவும் இருந்தேன்.
உங்களை ஊக்குவிக்கும் தலைவர்கள் அல்லது ஆளுமைகள் யாராவது உள்ளனரா?
அர்த்தமுள்ள சாதனைகளை நிகழ்த்திய முன்மாதிரி தலைவர்களாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோரை நான் பார்க்கிறேன்.
இதுவரை நீங்கள் தேசிய ஊடகங்களுடன் உரையாடவில்லை. இப்போது ஏன்?
ஆம், இது தான் தேசிய ஊடகங்களுடன் எனது முதல் உரையாடல். இதை நான் ஒரு mock interview போலவே பார்க்கிறேன். நான் போதுமான அளவு பேசவில்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், நான் என் உரைகளின் மூலம் பேசிக்கொண்டே இருக்கிறேன். நான் எப்போதும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்.
அரசியலில் நுழைய வேண்டும் என்று நீங்கள் தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது எப்போது?
கோவிட் காலத்திற்குப் பிறகு அரசியலைப் பற்றி நான் மிகவும் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன். இது திடீரென எடுத்த முடிவு அல்ல. என் தந்தை அரசியல் இயக்குநராக இருந்தவர். அதனால் இந்த உலகத்தை அருகிலிருந்தே பார்த்தும் புரிந்தும் நான் வளர்ந்தேன்.
இதை ஒரு குறுகிய கால அரசியல் முயற்சியாக பார்க்கிறீர்களா, இல்லையா ஒரு நீண்ட பயணமாகவா?
இது ஒரு நீண்டகாலத் திட்டம். இதை நான் சீரியஸாகத்தான் செய்கிறேன்; சாதாரணமாக அல்ல. 33 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவை நான் மனப்பூர்வமாக கைவிட்டுள்ளேன். அது எளிதான முடிவு அல்ல. ஆனால் முடிவு எடுத்துவிட்டேன். நீண்ட பயணத்திற்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன்.
கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க நீங்கள் தயக்கம் அல்லது தன்னம்பிக்கை குறைவு காட்டுகிறீர்கள் என்று பலர் நினைக்கிறார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?
அது உண்மை என்று நான் நினைக்கவில்லை. இன்று எல்லா வகையான கேள்விகளுக்கும் அமைதியாகவும் தெளிவாகவும் பதிலளித்தேன்.நான் இங்கு ஏன் இருக்கிறேன் என்பதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை. என் முடிவை உறுதியாக எடுத்துவிட்டேன். திரைப்படங்களை நான் கைவிட்டுவிட்டேன் இதுதான் என் எதிர்காலம்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
