சென்னையில் பயங்கரம் - பீகார் இளைஞர் குடும்பத்துடன் அடித்து கொலை - 2 வயது குழந்தையையும் விட்டுவைக்காத கொடூரர்கள் - நடந்தது என்ன
அட்மின் மீடியா
0
சென்னையில் பயங்கரம் - பீகார் இளைஞர் குடும்பத்துடன் அடித்து கொலை - 2 வயது குழந்தையையும் விட்டுவைக்காத கொடூரர்கள் - நடந்தது என்ன
கடந்த 26-ஆம் தேதி அடையார் இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு இருசக்கர வாகன ஷோரூம் அருகே, கேட்பாரற்று கிடந்த சாக்குமூட்டை ஒன்றிலிருந்து ரத்தம் கசிவதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த அடையார் போலீசார், மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, சுமார் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் கொடூரமான வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் உடனடியாகப் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரனையில் ஈடுபட்ட் போலீசாருக்கு அதிர்ச்சி அதிர்ச்சி தகவல் வந்தது
பீகாரை சேர்ந்த கௌரவ்குமார் 24 வயது என்ற இளைஞர் தனது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் வேலை தேடி சென்னை வந்த நிலையில், சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
வேலை கிடைத்த நிலையில் பீகார் இளைஞர் மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வசித்து வந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு குடியிருப்பில் தனியாக இருந்த பீகார் இளைஞரின் மனைவியிடம் மர்ம நபர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அவரது மனைவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பீகார் இளைஞரை மர்ம நபர்கள் தாக்கிய மர்ம நபர்கள் அடித்தே கொலை செய்துள்ளனர்
பீகார் இளைஞரை கொலை செய்துவிட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவரது மனைவியையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
தாய் - தந்தையை இழந்து கண்ணீர்விட்டு கதறிக் கொண்டிருந்த அவர்களின் 2 வயது ஆண் குழந்தையையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கொலை செய்துவிட்டு பீகார் இளைஞரின் உடலை சாக்குமூட்டையில் கட்டி அடையாறு இந்திரா நகர் ஆற்றங்கரையோரம் வீசியுள்ளனர்.
பீகார் இளைஞரின் குழந்தை சடலத்தையும் அடையாறு ஆற்றங்கரையோரம் வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்
கொலையான பீகார் இளைஞர் மற்றும் அவரது குழந்தை சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் மனைவியின் உடல் தேடப்படுகிறது. இளைஞரை கொலை செய்ததாக 5 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் பீகார் மாநிலத்தினை சேர்ந்த சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட 5 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்