Breaking News

2000 பேரை பலி வாங்கிய நிலநடுக்கம், உருக்குலைந்த மொரோக்கோ வீடியோ

அட்மின் மீடியா
0

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு வீடியோ இணைப்பு



மொரோக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மொரோக்கோ வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்திருக்கிறது. இதன் எல்லைகளில் கிழக்கே அல்ஜீரியா, வடக்கே ஸ்பெயின், தெற்கே மவுரித்தேனியா ஆகியன உள்ளன. 

மொரோக்கோ நாட்டில் இன்று அதிகாலை 3.14 மணிக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், 2000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் மாரகேஷ் பகுதியில் 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கி பலியாகிவிட்டனர், பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 

கட்டட இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது .இந்த சம்பவம் உலக நாடுகளை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மொரோக்கோவில் வெள்ளிக்கிழமை இரவு அந்த நாட்டு நேரப்படி இரவு சுமார் 11 மணியளவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் மரகேஷ் நகரில் இருந்து தென்மேற்கு திசையில் 71 கிலோமீட்டர் தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2012 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,200 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் மொராக்கோ அரசு தெரிவித்துள்ளது.

முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு சிறிது நேரம் கழித்து 4.9 ரிக்டர் அளவில் இரண்டாவதாக மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அச்சம் காரணமாக மக்கள் வீதிகளிலேயே நிரந்தரமாக தங்கியுள்ளனர்.



வீடியோ பார்க்க:-

https://twitter.com/laweyam/status/1700331505149489541

https://twitter.com/Don_Viral_ES/status/1700324979533889862

https://twitter.com/Ruby_yadav01/status/1700332807732830532

https://twitter.com/hugoflbennett/status/1700302262713614553

https://twitter.com/OUTTA__LINE/status/1700423707439566857

https://twitter.com/Media_Tak1/status/1700499192131817476 

https://twitter.com/Insider_Times/status/1700489565742751759

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback