டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் முழு விவரம் ttf vasan arrest
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறு கீழே விழுந்து விபத்தில் சிக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் அவரது கை, முறிந்துள்ளது.
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது
இந்நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அக்.3ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
