பக்கத்து வீட்டு நாய் கடித்ததை வீட்டில் சொல்லாமல் மறைத்த 14 வயது சிறுவன் ரேபிஸ் நோயால் பலி அதிர்ச்சி வீடியோ
பக்கத்து வீட்டு நாய் கடித்ததை வீட்டில் சொல்லாமல் மறைத்த 14 வயது சிறுவன் ரேபிஸ் நோயால் பலி அதிர்ச்சி வீடியோ
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் சரண் சிங் காலனியில் வசித்து வருபவர் யாக்கூப். இவர் அதே பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவரது மகன் ஷாவாஸ் . ஷாவாஸ் 8ம் வகுப்பு படித்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு பக்கத்து வீட்டில் நாய் கடித்தது நாய் கடித்துள்ளது. வீட்டில் சொன்னால் திட்டுவார்கள் என பயந்து தாய் தந்தையிடம் இருந்து மறைத்து விட்டார்
சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து விட்டது. சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுவன் உணவு உண்ண மறுத்து, தண்ணீரைக் கண்டால் பயந்து வெறுத்து ஒதுக்கி, வித்தியாசமாக சப்தம் எழுப்பினான். அவனது நடத்தையிலும் மாற்றங்கள் தெரியத் தொடங்கின.
பதறிப் போன பெற்றோர் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், நாய் கடித்து விஷம் தலைக்கேறி விட்டதாக கூறினர்.
பையனிடம் விசாரித்ததில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாய்குட்டி ஒரு மாதத்திற்கு முன்னர் தன்னை கடித்ததாக ஷாவாஸ் கூறினான். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
பக்கத்து வீட்டை சேர்ந்த சுனிதா, ஆகாஷ், ஷிவானி மற்றும் ராஷி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாய் குட்டிக்கு தடுப்பூசி போடாமல் வளர்த்து வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
நாய் கடித்து விட்டால் தடுப்பூசி போட்டால் சரியாகி விடும். ஆனால் சொல்லாமல் மறைத்ததால் ஒரு சிறுவன் பலியாகிவிட்டான்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்
