Breaking News

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்கம் செய்ய டிச 12-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

அட்மின் மீடியா
0

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்கம் செய்ய டிச 12-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்



தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ 

வாக்குச்சாவடிகள் திருத்தியமைத்தல், மறு சீரமைத்தல் போன்ற பணிகள் கடந்த ஆக.22-ம்தேதி தொடங்கப்பட்டது. இப்பணிகள் அக்.9-ம் தேதி முடிவடையும். 

தொடர்ந்து தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்.17-ல்வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அக்.27-ம் தேதி வெளியிடப்படும். இதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அன்றே வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கும். அன்று முதல், டிச.12-ம்தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பங்களை வழங்கலாம். 

மேலும், இந்த காலகட்டத்தில் நவ.4,5 மற்றும் 18, 19 ஆகிய சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பம் பெறப்படும்.அதைத் தொடர்ந்து, டிச.26-ம்தேதி வரை விண்ணப்பங்கள் பரிசீலனை நடைபெறும். அதன்பின் அடுத்தாண்டு ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

மேலும்

www.voters.eci.gov.in 

http://www.voters.eci.gov.in/

https://voterportal.eci.gov.in/ 

ஆகிய இணையதள முகவரி,வாக்காளர் உதவி கைபேசி செயலிஆகியவற்றின் மூலம் ஆன்லைனி லும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், வரும் 2024 ஜன.1, ஏப்.1, ஜூலை 1 மற்றும் அக்.1-ம் தேதி களில் 18 வயது பூர்த்தியடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்யலாம். இந்த திருத்த காலகட்டத்தில் ஆதார் இணைப்புக்கான விண் ணப்பமும் அளிக்கலாம். என அவர் தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback