மத்திய பிரசேதத்தில் கொடூரம் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அரை நிர்வாணமாக உதவி கேட்டு 2 மணிநேரமாக அலைந்த கொடுமை வைரல் வீடியோ
மத்திய பிரசேதத்தில் கொடூரம் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அரை நிர்வாணமாக உதவி கேட்டு 2 மணிநேரமாக அலைந்த கொடுமை வைரல் வீடியோ
மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினில் 12 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளார் மேலும் அரைகுறை ஆடைகளுடன் தெருவில் பலரிடம் உதவி கேட்டுஅலைந்து திரியும் சிசிடிவி வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
மத்திய பிரதேசம் உஜ்ஜயினில் உள்ள பட்நகர் பகுதியில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அரை நிர்வாணத்துடன் நடுரோட்டில் தூக்கி எறியப்பட்டுள்ளார்
சிறிது நேரத்திற்கு பிறகு மயக்கத்தில் இருந்து கண் விழித்த அந்த சிறுமி ரத்தப்போக்குடன் வீடு வீடாகச் சென்று உதவி கேட்டிருக்கிறார். ஆனால், சிறுமிக்கு உதவி செய்ய யாருமே முன்வரவில்லை.
அந்த சிறுமி எனக்கு ஆடை இல்லை. உடலில் ரத்தமாக இருக்கிறது. என்னை காப்பாற்றுங்கள். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எனக்கு உதவி செய்யுங்கள் என்று கூறுகின்றார்
ஆனால் உதவ யாரும் முன்வரவில்லை மேலும் ஒரு வீட்டிற்க்கு வெளியே உள்ள நபரிடம் அந்த சிறுமி உதவி கேட்டபோது அவர் அந்த சிறுமியை விரட்டி விட்டுள்ளார். இப்படி சுமார் 2 மணிநேரமாக அந்த சிறுமி சாலையில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்துள்ளார்
இந்த சம்பவம் அனைத்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதன் பின்னர் சிறுமியை ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் முதலுதவி செய்யப்பட்ட சிறுமியை உடனடியாக் இந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பாட்டர்
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமி உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் வசித்து வந்தவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
மேலும், இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில், ஒருவரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ