என் தலையை சீவ 10 கோடி எதற்க்கு 10 ரூபாய் சீப்பு போதும் நானே சீவிக்கொள்வேன் உ.பி சாமியாருக்கு கலைஞர் ஸ்டைலில் பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு ரூ.10 கோடி பரிசு உ.பி. சாமியார் பரமஹன்ஸ ஆச்சார்யா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி’ என அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வடமாநிலங்களில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/TamildiaryIn/status/1698672464354808248
அந்த உ.பி சாமியாருக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில்
என்னுடைய தலையை சீவ ஒரு சாமியார் 10 கோடி தருகிறேன் என கூறுகிறார். 10 ரூபாய் சீப்பு போதும் என் தலையை நானே சீவிக்கொள்வேன் என நகைச்சுவையாக தனது பதிலடியை கொடுத்துள்ளார். மேலும்
இதே மாதிரி ஒரு சாமியார் கலைஞரையும் மிரட்டினார் கலைஞர் தலையை சீவி கொண்டுவருவோருக்கு ரூ.1 கோடி எனக் கூறினார் இதற்கு கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா? நீங்கள் 100 கோடி ரூபாய் கொடுத்தால் என் தலையை என்னாலேயே சீவ முடியாது என பதிலடி கொடுத்தார்.
அம்பேத்கர், பெரியார், கலைஞர், அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகிய அனைவரும் சனாதன கொள்கையை ஒழிக்கவே போராடிவருகின்றனர். தற்போது இந்தியா முழுக்க என்னைப்பற்றி தான் பேசுகிறார்கள். இந்தியா முழுக்க என் மீது புகார்கள் குவிகின்றன. என்னுடைய தலைக்கு 10 கோடி ஒரு சாமியார் கூறுகிறார். சாமியாருக்கு எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது.? என கேள்வி ஏழுப்பினார்.
100 வருடத்துக்கு முன் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது, 70 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் மேலாடை அணியக் கூடாது, படிக்க கூடாது இதையெல்லாம் உடைத்தது திராவிட முன்னேற்ற கழகம். சமூக நீதி. அதைதான் நான் பேசினேன். திமுகவை இந்து விரோத கட்சி என சொல்கின்றனர்” என்றார்.
உதயநிதி ஸ்டாலின் வீடியோ பார்க்க:-
Tags: அரசியல் செய்திகள்
