Breaking News

பள்ளி மாணவ மாணவிகளுக்கு பிரதமரின் YASASVI கல்வி உதவித் தொகை திட்டம்!. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்! எப்படி விண்ணப்பிக்கலாம் முழு விவரம் PM YASASVI Scheme

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 




தமிழகத்தை சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள், சீர்மரபினர், மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 

மேலும் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு அல்லது 11 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் மாணவர்களில், 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 1.4 லட்சமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.


விண்ணப்பிக்க:-

https://yet.nta.ac.in/frontend/web/

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

10.08.2023

விண்ணப்பம் திருத்த:-

12.08.2023 முதல் 16.08.2023  தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

தேர்வு நாள்:-

29.09.2023

Tags: கல்வி செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback