Breaking News

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நேரடி மாணாக்கர் சேர்க்கை!! எந்த எந்த கல்லூரியில் முழு விவரம்TNGASA 2023 UG VACANCY

அட்மின் மீடியா
0
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நேரடி மாணாக்கர் சேர்க்கை!!

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை நடத்தப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் 2023-24-ஆம் ஆண்டிற்கான இளநிலை கல்லூரிகளில் பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முடிவுற்ற நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission)  கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடைபெற உள்ளது.

மாணாக்கர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் "TNGASA2023-UG VACANCY"- என்ற தொகுப்பில் காணலாம்

 மேலும் விவரங்களுக்கு:-

https://static.tneaonline.org/docs/arts/UG-VACANCY-2023.pdf?t=1692184977131

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback